"தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை வேண்டாம்" - மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை


தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை வேண்டாம் - மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை
x

தேர்தல் ஆணையர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு படிகளுக்கான வருமான வரி விலக்கு சலுகையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புதிய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 15 ஆம் தேதி ராஜீவ் குமார் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு படிகளுக்கான வருமான வரி விலக்கு சலுகையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்களுக்கு தற்போது மாதாந்திர சிறப்புப் படியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புப் படி வருமான வரிச்சலுகை வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக முடிவெடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவை தவிர தேர்தல் ஆணையர், அவரது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் விடுப்பு பயண சலுகைகளையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story