பிரதமர் மோடியுடன் இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது


பிரதமர் மோடியுடன் இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
x

கோப்புப்படம்

பிரதமர் மோடியுடன் இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நொய்டா,

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகளுடன் இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த நொய்டாவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செக்டார் 107-ல் வசிக்கும் முகமது காஷிப் (வயது 36) என்ற நபர் மத்திய மற்றும் மாநில மந்திரிகளுடன் இருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி டெண்டர்கள் மற்றும் அரசு வேலைகளை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு மெர்சிடிஸ் கார் மற்றும் 3 ஆப்பிள் ஐபோன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 467, 468, 471 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story