பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினசரி பாதிப்பு அதிக பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் தற்போது தினமும் 16 ஆயிரம் சோதனைகளை நடத்தி வருகிறோம். அதை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story