ஒடிசா அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி


ஒடிசா அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி
x

கோப்பு படம்

ஒடிசாவில் இலக்கை சென்று தாக்கி, அழிக்க கூடிய நடுத்தர தொலைவு அக்னி-1 ஏவுகணை பரிசோதனை முயற்சி இன்று வெற்றியடைந்து உள்ளது.

புதுடெல்லி,

ஒடிசாவின் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து இலக்கை சென்று தாக்கி, அழிக்க கூடிய நடுத்தர தொலைவு அக்னி-1 ஏவுகணை பரிசோதனை முயற்சி இன்று நடைபெற்றது.

இந்த முயற்சி வெற்றியடைந்து உள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த ஏவுகணையானது மிக உயர்ந்த கோணத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமுடன் தாக்கும் திறன் பெற்றவை.

இந்த ஏவுகணையின் அனைத்து செயல் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப வரையறை சார்ந்த விசயங்களும் சோதனை முயற்சியில் உறுதிப்படுத்தப்பட்டு, வெற்றியடைந்து உள்ளது.


Next Story