ஒடிசா: எண்ணெய் லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு


ஒடிசா:  எண்ணெய் லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
x

ஒடிசாவில் எண்ணெய் லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து வெடித்ததில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.



புவனேஸ்வர்,



ஒடிசாவில் பாரதீப் நகரில் இருந்து நயாகார் நோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், நயாகார் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் லாரிகளில் ஒன்று குஸ்மி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனை தொடர்ந்து மற்றொரு லாரியில் இருந்த நபர் ஒருவர் முதல் லாரியில் இருந்தவர்களை மீட்பதற்காக சென்றுள்ளார். ஆனால், திடீரென எரிபொருள் நிரம்பியிருந்த லாரி வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார்.

அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். எனினும், அவரது தீவிர ஆபத்து நிலையில் உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story