டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு - இன்று கூடுகிறது


டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு - இன்று கூடுகிறது
x

டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூட உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூட உள்ளது.

இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சிப்பதற்காக பா.ஜ.க.விற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story