ஜார்கண்ட்: பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 12 பேர் காயம்


ஜார்கண்ட்: பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 12 பேர் காயம்
x

கொல்கத்தாவில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியின் புறநகரில், இன்று அதிகாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொல்கத்தாவில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து அதிகாலை 5 மணியளவில் இச்சாதி பகுதியில் வந்த போது விபத்துக்குள்ளானது. அதிவேகமாக சென்றதால் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 35 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story