ராஜஸ்தானில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை


ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை
x

ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜே.இ.இ., நீட் பயிற்சி மையங்களுக்கு பிரசித்தி பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2½ லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர், படிப்பு நெருக்கடி தாளமுடியாமல் தற்கொலையை நாடும் துயரமும் தொடர்கிறது.

இந்த நிலையில் புதிய சோகமாக, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஒரு 16 வயது மாணவி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ரிச்சா சின்கா என்ற அந்த மாணவி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார்.

கோட்டாவில் இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள 23-வது மாணவர் இவர் ஆவார். மாணவர்களின் தற்கொலை தொடர்வதற்கு, அவர்களுக்கு அவர்களது பெற்றோர் கொடுக்கும் நெருக்கடிதான் முக்கிய காரணம் என பயிற்சி நிலையத்தினரும், போலீசாரும் புகார் கூறுகின்றனர்.


Next Story