காஷ்மீருக்குள் பலூன்களுடன் பறந்து வந்த பாகிஸ்தான் கொடி


காஷ்மீருக்குள் பலூன்களுடன் பறந்து வந்த பாகிஸ்தான் கொடி
x

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொடி மற்றும் பலூன்களை கைப்பற்றினர்.

உதம்பூர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் ராம்நகர் தாலுகாவில் உள்ள சுனேதார் கிராமத்தில் நேற்று அதிக அளவு பலூன்கள் பறந்து வந்தன. பலூன்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இருந்தன. பலூன்களுடன் பாகிஸ்தான் கொடிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொடி மற்றும் பலூன்களை கைப்பற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story