பாகிஸ்தானில் பெஷாவர் ஐகோர்ட்டில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்


பாகிஸ்தானில் பெஷாவர் ஐகோர்ட்டில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்
x
தினத்தந்தி 2 April 2023 8:42 PM GMT (Updated: 2 April 2023 10:57 PM GMT)

பாகிஸ்தானில் பெஷாவர் ஐகோர்ட்டில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம் செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கைசர் ரஷீத் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக முசரத் ஹிலாலி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை முசரத் ஹிலாலி பெறுகிறார். அதேபோல் பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதியாகும் 2-வது பெண் முசரத் ஹிலாலி ஆவார். பலூசிஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சையதா தாஹிர் என்ற பெண் நீதிபதி உள்ளார்.

பெஷாவர் ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முசரத் ஹிலாலிக்கு கைபர் பக்துங்வா மாகாண கவர்னர் குலாம் அலி, ஐகோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story