நாடாளுமன்ற தேர்தல்: உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கீடு - அகிலேஷ் யாதவ்


நாடாளுமன்ற தேர்தல்: உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கீடு - அகிலேஷ் யாதவ்
x

தொகுதி பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றது.

இந்த சூழலில், தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. தொகுதி ஒதுக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வந்தது. இதனால் கட்சியின் தொகுதி பங்கீடு முடிந்த பிறகே யாத்திரையில் பங்கேற்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகளை வழங்க அகிலேஷ் முன்வந்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளுக்கான கூட்டணி சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story