ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த டி.ராஜா


ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த டி.ராஜா
x

ராகுல் காந்தி தேசிய அந்தஸ்துள்ள தலைவர் அவர் ஆளும் பா.ஜனதாவுக்கு நேரடியாக சவால் விடக்கூடிய இடத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று டி ராஜா தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல்காந்தி. கடந்த தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டார். ஆனால் அமேதியில் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என் று காங்கிரஸ் மேலிடம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி .ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச் செயலாளர் டி ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஒரு இடத்தில் யாரை நிறுத்துவது என்பது அந்த அரசியல் கட்சியின் உரிமை. "கேரள ஆளும் கூட்டணியில் எங்கள் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன, அதில் வயநாடும் ஒன்று, எனவே நாங்கள் எங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளோம். ஆனால் அங்கு ராகுலை நிறுத்துவது காங்கிரசின் உரிமை. எனினும், ராகுல் காந்தி ஒரு மாநிலத் தலைவர் அல்ல, தேசியத் தலைவர் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ."ராகுல் காந்தியின் அந்தஸ்துக்கு அவர் வேறு எந்த தொகுதியிலாவது நேரடியாக பா.ஜனதாவை எதிர்கொண்டிருக்க வேண்டும்.

"ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை ஏற்பாடு செய்தார். அது நன்றாக இருந்தது, நாங்கள் அனைவரும் அதை வரவேற்றோம். வயநாட்டில் போட்டியிடும் அவர் மக்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்கிறார்? ராகுலும், காங்கிரசும் தங்கள் முதன்மை இலக்காக யாரைக் கருதுகிறார்கள் என்பதை தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும்.இவ்வாறு டி.ராஜா கூறினார். ராஜாவின் இந்த பேட்டி காங்கிரஸ் மீது அவர் அதிருப்தியில் இருப்பதையும், ராகுல் போட்டியிடுவதற்கு எதிராக அவர் இருப்பதை தெரிவிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story