'ஆம் ஆத்மி கட்சியினருக்கு நற்குணங்கள் கிடையாது' - கங்கனா ரனாவத் விமர்சனம்


ஆம் ஆத்மி கட்சியினருக்கு நற்குணங்கள் கிடையாது - கங்கனா ரனாவத் விமர்சனம்
x

ஆம் ஆத்மி கட்சியினருக்கு நல்ல குணாதிசயங்கள் கிடையாது என பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜனதா தீட்டிய சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மால்வால் உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நல்ல குணாதிசயங்கள் கிடையாது என மண்டி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆம் ஆத்மி கட்சியினருக்கு நல்ல குணாதிசயங்கள் கிடையாது. பல ஊழல்களை செய்து, சிறைக்கு சென்ற பிறகும் தங்கள் பதவிகளை விட்டு விலக மறுக்கிறார்கள். தார்மீக அடிப்படையில் இவர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும். சிறைக்கு செல்லும் நபர்களின் குணாதிசயங்கள் கேள்விக்குரியதாகவே இருக்கும்."

இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்தார்.


Next Story