பா.ஜனதாவை கேரள மக்கள் ஆதரிப்பார்கள்: அண்ணாமலை நம்பிக்கை
கேரளாவில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.
கொல்லம்,
கேரளாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். கொல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:
நாட்டு மக்கள் பிரதமரை தேர்வு செய்யப் போகும் தேர்தல் இது. இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர். 10 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பார்த்து உள்ளனர். அவர்கள் நிலைத்தன்மையை விரும்புகின்றனர். மோடி ஆட்சி தொடர விரும்புகின்றனர்.
இந்தியா கூட்டணி கட்சிகள் அதிகாரப் பசியால் ஒன்று கூடி உள்ளனர். அவர்கள் பேராசை கொண்டவர்களாக உள்ளனர். இந்த முறை கேரள மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் பா.ஜ.க,வின் ஓட்டு சதவீதம் அதிகரிக்க மக்கள் உதவியாக இருந்தனர். இந்த முறை இங்கிருந்து பா.ஜ.க,வைச் சேர்ந்தவர் வெற்றி பெறும் அளவுக்கு கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்
Related Tags :
Next Story