பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு


பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு
x
தினத்தந்தி 6 April 2024 2:35 PM IST (Updated: 6 April 2024 5:09 PM IST)
t-max-icont-min-icon

இந்த வழக்கு விசாரணைக்கு லாலு பிரசாத் யாதவ் தரப்பில் யாரும் ஆஜராகததால் குவாலியர் சிறப்பு கோர்ட்டு அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

குவாலியர்,

கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு குவாலியரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்டை கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் அவரை கைது செய்யும் போது கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அபிஷேக் தெரிவித்தார்.

முன்னதாக பீகாரில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story