ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்


ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
x

எழுத்தாளரும் ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக்கின் சகோதரியான கீதா மேத்தா டெல்லியில் காலமானார்.

புதுடெல்லி,

பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா (80) நேற்று புதுடெல்லியில் காலமானார்.

இந்நிலையில் மறைந்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான கீதா மேத்தாவின்குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில், "பிரபல எழுத்தாளர் ஸ்ரீமதி கீதா மேத்தா ஜி அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் ஒரு பன்முக ஆளுமையாக இருந்தார், அவருடைய அறிவுத்திறன் மற்றும் எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பின் மீதான ஆர்வத்திற்காக அறியப்பட்டார். அவர் இயற்கை மற்றும் நீர் பாதுகாப்பிலும் ஆர்வமாக இருந்தார். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் நவீன் பட்நாயக் மற்றும் முழு குடும்பத்துடன் உள்ளன. ஓம் சாந்தி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story