பிரதமர் மோடி 270 இடங்களை தாண்டிவிட்டார்; ராகுலுக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது - அமித்ஷா தாக்கு


Amit Shah hits out Rahul Gandhi
x

Image Courtesy : ANI

பிரதமர் மோடி இதுவரை 270 இடங்களை தாண்டிவிட்டார் என்றும் ராகுல் காந்திக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது என்றும் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 20-ந்தேதி(நாளை) 5-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் பிரதமர் மோடி 270 இடங்களை தாண்டிவிட்டார். ஆனால் ராகுல் காந்திக்கு 40 இடங்கள் கூட கிடைக்காது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பீகார் மாநிலத்திற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பீகாருக்கு 14 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அவர்களை நாம் மதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் ஐயர் கூறுகிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாம் எடுத்துக் கொள்வோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Next Story