காஷ்மீரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஜம்மு,
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்தியில் ஆளும் பா.ஜனதா தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வருகிற 20-ந்தேதி காஷ்மீரில் இருந்து தொடங்குகிறார். ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் விளையாட்டு மைதானத்தில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையால் அங்கு பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story