ஐதராபாத் மாநகர பாஜக கவுன்சிலர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

Image Courtesy : AFP
பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் 47 ஐதராபாத் பாஜக கவுன்சிலர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (ஜிஹெச்எம்சி) பாஜக கவுன்சிலர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் சந்திக்கிறார். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.
இந்தக் கூட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் 47 ஐதராபாத் பாஜக கவுன்சிலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி ஐதராபாத் பயணத்தின் போது, பிரதமர் மோடி மாநில பாஜக தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜூலை 2 மற்றும் 3 தேதிகளில் ஐதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






