மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை


மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை
x

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி ஜனதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதனை தொடர்ந்து 1-ந்தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு நேற்று முன்தினம் மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பிற்பகலுக்கு மேல் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் துணிச்சலையே இழந்து விட்டன. எதிர்க்கட்சி வரிசையிலேயே நீண்டகாலம் இருக்க முடிவு செய்து விட்டன என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் கூட்டத்தொடர் ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று அறிவித்தார்.


Next Story