பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம்


பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் பயணம்
x
தினத்தந்தி 12 Feb 2024 7:51 PM IST (Updated: 13 Feb 2024 1:27 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நாளை மறுதினம் கத்தார் செல்கிறார்.

டெல்லி,

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து அபுதாபியில் உள்ள அரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே (14ம் தேதி) பிரதமர் மோடி கத்தார் செல்கிறார். கத்தார் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

முன்னதாக, உளவு பார்த்ததாக கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 7 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story