டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி: பாட்டுப்பாடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்..!


டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி: பாட்டுப்பாடி பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்..!
x

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டுப்பாடி பெண் வாழ்த்து கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிரதமர் மோடியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் கட்சித் தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

டெல்லி துவாரகாவில் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையத்தை பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறந்து வைத்தார். முன்னதாக, மாநாட்டு மையத்துக்கு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் போது, பெண்கள், குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் மெட்ரோ பயணிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் சமஸ்கிருதத்தில் பாடலைப்பாடி பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


Next Story