பிரதமர் மோடி வரும் 30-ந்தேதி அயோத்தி பயணம் - புதிய ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்


பிரதமர் மோடி வரும் 30-ந்தேதி அயோத்தி பயணம் - புதிய ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்
x

‘அம்ரித் பாரத்’ ரெயில்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கிடையே அயோத்தி ரெயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இந்த ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி வரும் 30-ந்தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது இரண்டு 'அம்ரித் பாரத்' ரெயில்களின் இயக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் "அயோத்தி தாம்" என மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 'அயோத்தி தாம்' என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story