நோ-பார்க்கிங்கில் நிறுத்திய ஸ்கூட்டரை உரிமையாளரோடு சேர்த்து கட்டித் தூக்கிய போலீஸ்...


நோ-பார்க்கிங்கில் நிறுத்திய ஸ்கூட்டரை உரிமையாளரோடு சேர்த்து கட்டித் தூக்கிய போலீஸ்...
x

நாக்பூரில் ஸ்கூட்டரை அதன் உரிமையாளரோடு சேர்த்து போக்குவரத்து காவலர்கள் கட்டித் தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நோ-பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை அதன் உரிமையாளரோடு சேர்த்து, கிரேன் மூலமாக போக்குவரத்து காவலர்கள் கட்டித் தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கிரேன் மூலம் தூக்கப்படும்போது கூட, அந்த நபர் ஏதோ ராட்டினத்தில் ஆடுவது போல இயல்பாக கிரேன் ஆப்பரேட்டரிடம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

இந்த சம்பவம் நாக்பூரில் உள்ள அஞ்சுமன் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் நோ-பார்க்கிங்கில் பார்க் செய்ததற்காக அந்த நபருக்கு 760 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story