சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் - பெங்களூருவில் போலீஸ் அதிகாரி கைது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் - பெங்களூருவில் போலீஸ் அதிகாரி கைது
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் தேர்வு முறைகேடு

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள், போலீசார், பா.ஜனதா, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவாகி இருந்தது.

அந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்த ஹர்ஷா என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வில் தான் வெற்றி பெறுவதற்கு பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஹரீஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி சப்-இன்ஸ்பெக்டர் ஹரீசுக்கு, சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் ஹர்ஷா தேர்ச்சி பெற ஹரீஷ் இடைத்தரகராக செயல்பட்டதுடன், ரூ.60 லட்சத்தை கொடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த ரூ.60 லட்சத்தை ஹரீஷ் யாரிடம் கொடுத்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஹரீசிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடு விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story