அரசியல் ஒலி பெருக்கி


அரசியல் ஒலி பெருக்கி
x

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை இங்குபார்க்கலாம்.

நடிகர்கள் மூலமாக ஓட்டுகள் வாங்க பா.ஜனதா முயற்சி

நடிகர்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர்கள். அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் நடிகர்கள் மீது ஈர்ப்பு இருக்கும். தற்போது அந்த நடிகர்களின் முகத்தை காட்டி சட்டசபை தேர்தலில் ஓட்டுகள் வாங்க பா.ஜனதா முயற்சிக்கிறது. சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று முன்கூட்டியே பா.ஜனதாவுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான் நடிகர்களின் முகத்தை காட்டி ஓட்டுகள் வாங்க நினைக்கிறார்கள்.

- டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர்.

அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். இதுவே எனது கடைசி தேர்தல் ஆகும். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். உங்கள் மீது இருந்த நம்பிக்கையில் காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு வந்து எம்.எல்.ஏ. ஆனேன். கடைசி தேர்தலில் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளேன்.

- பி.சி.பட்டீல், விவசாயத்துறை மந்திரி

நடிகர்கள் பிரசாரத்தால் ஓட்டுகள் வராது

பா.ஜனதாவினர் தங்களது கட்சியின் பிரசாரத்திற்காக சுதீப், பவன் கல்யாண் உள்ளிட்ட பிரபல நடிகர்களை அழைத்து வருகிறார்கள். நடிகர்கள் பிரசாரத்தால் ஓட்டுகள் வருமா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். நடிகர்கள் பிரசாரம் செய்தாலும் ஓட்டுகள் வராது. பிரதமர் மோடி போன்ற நட்சத்திர நடிகர்களால் கூட பா.ஜனதாவால் மக்களை கவர முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நடிகர்களால் என்ன செய்ய முடியும்.

- குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி

அரசியல் லாபத்திற்காக இடஒதுக்கீடு அதிகரிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இடஒதுக்கீட்டை பா.ஜனதா அரசு அதிகரித்துள்ளது. ஒரு சமுதாயத்தின் உரிமையை பறித்து கொண்டு, அந்த உரிமையை மற்றொரு சமுதாயத்திற்கு பா.ஜனதாவினர் கொடுத்துள்ளனர். இது உண்மையான இடஒதுக்கீடு இல்லை. அரசியல் லாபத்திற்காகவும், சட்டசபை தேர்தலுக்காகவும் மட்டும் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில மக்கள் புரிந்து கொண்டு பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

- சித்தராமையா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்


Next Story