அரசியல் ஒலி பெருக்கி


அரசியல் ஒலி பெருக்கி
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:46 PM GMT)

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் கூறிய கத்துகளை இங்கு பார்க்கலாம்.

பெங்களூரு:

'பா.ஜனதாவை விட்டு செல்பவர்கள் செல்லட்டும்'

பா.ஜனதா சார்பில் போட்டியிட ஏராளமான தலைவர்கள் உள்ளனர். கட்சியை விட்டு விலகுபவர்களால் என்றைக்கும் பிரச்சினை தான். அவர்கள் கட்சியில் இருந்தபோதும் பிரச்சினை தான். எந்த கட்சிக்கு சென்றாலும் அங்கும் டிக்கெட் எதிர்நோக்கி இருப்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். கட்சியை விட்டு செல்பவர்கள் செல்லட்டும். பா.ஜனதா பக்கம் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர்.

-பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரி.

'ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கனவு பலிக்காது'

ஜனதா தளம்(எஸ்) கட்சி 'கிங் மேக்கர்' ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கிறது. தொங்கு சட்டசபை வந்தால் தங்களது விலையையும், அதிகாரத்தையும் உயர்த்தி விடலாம் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள். அது எப்போதும் சாத்தியமில்லை.

-விஜயேந்திரா, பா.ஜனதா மாநில துணை தலைவர்.

'லட்சுமண் சவதி விலகியதால் துக்கம்'

முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான லட்சுமண் சவதி பா.ஜனதாவைவிட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தது எனக்கு துக்கம் அளிக்கிறது. பா.ஜனதாவில் அவருக்கென ஒரு தனி இடம், மரியாதை இருந்தது. இப்போதும் அது உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

-பசவராஜ் பொம்மை, முதல்-மந்திரி.

'பா.ஜனதா கூறுவது பொய்'

பா.ஜனதா ஆட்சிக்கு வர காரணமானவர்களுக்கு டிக்கெட் கொடுத்திருப்பதாக கூறுவது பொய். அப்படியானால் ஏன் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகியோருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. மற்றொருவருக்கு ஒரு நியாயம். லட்சுமண் சவதிக்கு ஒரு நியாயமா?. என்னை பா.ஜனதா தலைவர்கள் அவமதித்து விட்டனர்.

-லட்சுமண் சவதி, முன்னாள் துணை முதல்-மந்திரி.

'காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது'

பா.ஜனதாவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு, மரியாதை அளிக்கப்படுவது இல்லை. இதை கண்கூடாக மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. அதை பா.ஜனதாவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராது.

-சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்.


Next Story