ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு


ராமர் கோவில் கும்பாபிஷேக விழா:  ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு
x

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷே க விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ராமர் கோவில் கட்டுமான மேற்பார்வை கமிட்டி தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயற்குழு தலைவர் அலோக் குமார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராம்லால் ஆகியோர் ராஷ்டிராபதி பவன் சென்று அழைப்பிதழை ஜனாதிபதியிடம் வழங்கினர்.


Next Story