வடமாநிலங்களை மிரட்டும் கனமழை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி
பருவமழை பாதிப்புகளை விரைந்து சீர்செய்யவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நிலச்சர்வு காரணமாக சாலைகள் துண்டிக்ப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் மழை வெளுத்து வாங்குகிறது.
இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வடமாநிலங்களில் வெளுத்துவாங்கும் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி, பருவமழை பாதிப்புகளை விரைந்து சீர்செய்யவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.