பீகாரில் தனியார் வங்கி கிளையில் காவலரை துப்பாக்கியால் சுட்டு ரூ.27 லட்சம் கொள்ளை
துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி, ரூ.27 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் ஷியோஹர் மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக வங்கிக்குள் நுழைந்துள்ளது. அவர்களில் ஒரு நபர் வங்கியின் காவலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்து 27 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வங்கி காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story