பஞ்சாப்: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் கண்டெடுப்பு

Image Courtesy : ANI
உடைந்த நிலையில் கிடந்த ‘குவாட்காப்டர்’ எனப்படும் டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள ஹசரா சிங் வாலா கிராமத்தின் வயல்வெளிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு உடைந்த நிலையில் கிடந்த 'குவாட்காப்டர்' எனப்படும் டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிரோன், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






