மோசமான வானிலை.. ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்தியபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
போபால்,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று மத்தியபிரதேச மாநிலம் மாண்ட்லா மற்றும் ஷாதோல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வாக்குசேகரித்தார். இதன் பின்னர், ஜபல்பூருக்கு சென்று, அங்கிருந்து டெல்லிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், ஷாதோலில் மோசமான வானிலை நிலவி வந்ததன் காரணமாக ராகுல்காந்தி செல்லவிருந்த ஹெலிகாப்டரால் புறப்பட முடியவில்லை. இதையடுத்து ஷாதோலில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று இரவு ராகுல்காந்தி தங்குகிறார். பின்னர் நாளை அவர் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story