சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோதனை: தெலுங்கானாவில் ரூ.347 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்


சட்டசபை தேர்தலை முன்னிட்டு சோதனை: தெலுங்கானாவில் ரூ.347 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2023 5:16 AM IST (Updated: 27 Oct 2023 11:52 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.347 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. நேற்றுவரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.347 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்படி ரூ.122.6 கோடி ரொக்கம், 230.9 கிலோ தங்கம், 1,038.9 கிலோ வெள்ளி, ரூ.20.7 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.17.18 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ.30.4 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என மொத்தம் ரூ.347 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story