ஹலகூரில் இடி மின்னலுடன் பலத்த மழை; மரம் சாய்ந்து விழுந்து விவசாயி பலி


ஹலகூரில் இடி மின்னலுடன் பலத்த மழை; மரம் சாய்ந்து விழுந்து விவசாயி பலி
x

ஹலகூரில் பெய்த பலத்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியானர். மேலும் 19 வீடுகள் இடிந்ததுடன், 26 ஆடுகள் செத்தன.

ஹலகூர்:

ஹலகூரில் பெய்த பலத்த மழையில் மரம் சாய்ந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியானர். மேலும் 19 வீடுகள் இடிந்ததுடன், 26 ஆடுகள் செத்தன.

மரம் சாய்ந்து விவசாயி சாவு

மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த பெய்து வருகிறது. இந்த மழையால் ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.மேலும் தாழ்வான பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஹலகூருவில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால்ஹட்லி கிராமத்தில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சிவலிங்கேகவுடா மற்றும் ஸ்ரீகண்டே கவுடா ஆகியோர் வழக்கம்போல ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் மீது ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.

இதில் விவசாயிகள் 2 பேர் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த ஆடுகள் சிக்கி உயிருக்காக போராடி கொண்டிருந்தன. இதை பார்த்த பொதுமக்கள் உடனே கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள், மரத்தை வெட்டி, 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவலிங்ககேவுடா உயிரிழந்தார். ஸ்ரீகண்டேகவுடாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

26 ஆடுகள் செத்தன

அதேபோல இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 19 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன. இதை தொடர்ந்து ஹலகூருவில் பெய்த மழையில் 19 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் குனானாபுராவை சேர்ந்த கவுரம்மா என்பவரின் மாட்டு தொழுவம் ஒன்றும் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் தொழுவத்தில் இருந்த 7 ஆடுகள் இறந்தன. இது தவிர அங்கனஹள்ளி கிராமத்தில் நாராயணா, குண்டய்யா என்பவர்களின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் நாராயணாவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த, பட்டுப்புழுக்கள் அனைத்தும் இறந்து போயின. மேலும் இருவரின் வீடுகளில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தது.


Next Story