பெங்களூருவில் தான் பணியாற்றிய பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் செய்த ரஜினிகாந்த்..!


பெங்களூருவில் தான் பணியாற்றிய பஸ் டிப்போவுக்கு திடீர் விசிட் செய்த ரஜினிகாந்த்..!
x
தினத்தந்தி 29 Aug 2023 8:30 AM GMT (Updated: 29 Aug 2023 9:57 AM GMT)

பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் செய்த சம்பவம் ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்தில் பஸ் கண்டக்டராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் நடிக்க துவங்கிய பிறகு ரஜினிகாந்த் ஆக மாறியது. பணியின் போது மற்ற கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்க அரைமணி நேரம் எடுப்பார்கள் ஆனால் நான் 10 நிமிடத்திற்குள்ளேயே டிக்கெட் அனைத்தையும் கொடுத்து முடித்து விடுவேன் என பிளாஷ் பேக் ஸ்டோரியை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

இந்தநிலையில், பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீர் விசிட் செய்தார். அப்போது பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார். தாம் பணியாற்றிய நினைவலைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் டிப்போவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story