ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

Image Courtesy : @rajnathsingh
லடாக்கில் ராணுவ வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
லடாக்,
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நாளை(25-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்றைய தினமே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு இன்று 'ஹோலிகா தஹன்' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கே செல்வதை தவிர்த்துவிட்டு, லடாக்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஹோலி பண்டிகையை ராஜ்நாத் சிங் உற்சாகமாக கொண்டாடினார்.
Related Tags :
Next Story






