ஜனாதிபதி தேர்தல்: மம்தா பானர்ஜியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு


ஜனாதிபதி தேர்தல்:  மம்தா பானர்ஜியிடம் ராஜ்நாத் சிங் பேச்சு
x

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசி வாயிலாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேசியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் ராஜ்நாத்சிங் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story