"அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர் " - திருப்பதியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர். யார் விரும்பினாலும் அங்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம் என்றார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ,
மனநிறைவு ஏற்படும் வகையில் இன்று ஏழுமலையானை வழிபட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், "அயோத்தி ராமர் அனைவருக்கும் பொதுவானவர். யார் விரும்பினாலும் அங்கு சென்று வழிபாடு மேற்கொள்ளலாம் என்றார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை தலைமைக்கழகம் அறிவித்த தேர்தல் பணிக்குழு துவக்கி இருக்கிறது" என்று கூறினார்.
Related Tags :
Next Story