5 வயது சிறுமி பலாத்காரம்; உறவுக்கார சிறுவன் கைது


5 வயது சிறுமி பலாத்காரம்; உறவுக்கார சிறுவன் கைது
x

உப்பள்ளியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவுக்கார சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி:

உப்பள்ளியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவுக்கார சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி பலாத்காரம்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி பெண்டிக்கேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட சித்தரோட மடம் பகுதியை சேர்ந்தவன் 15 வயது சிறுவன். அதேப்பகுதியில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் நேற்று அந்த சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த சிறுவன், அவளை அங்குள்ள அங்கன்வாடி கட்டிடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு வைத்து சிறுமியை சிறுவன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளான்.

சிறுவன் கைது

ஆனாலும் இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து பெண்டிக்கேரி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார், 2 பேரையும் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியை சிறுவன் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கைது ெசய்த போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பெண்டிக்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story