12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியுள்ளது.
பாலக்காடு,
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி அருகே மன்னலாறு எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் மனு தேவன் (வயது 24). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 12 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி, தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாடகிரி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மனு தேவனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பாலக்காடு போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விநாயகர் ராவ், மனு தேவனுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறினார்.