'தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது' - திரிபுரா முதல்-மந்திரி மானிக் சாஹா


தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருகிறது - திரிபுரா முதல்-மந்திரி மானிக் சாஹா
x

திரிபுராவில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல்-மந்திரி மானிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என அம்மாநில முதல்-மந்திரி மானிக் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பா.ஜ.க. உழைத்து வருவதாகவும், திரிபுராவில் கடந்த தேர்தலை விட எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story