விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை நிறுத்த உத்தரவு


விக்சித் பாரத் செய்திகளை அனுப்புவதை நிறுத்த உத்தரவு
x

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வாட்ஸப் மூலம் அனுப்பும் விக்சித் பாரத் தொடர்பான தகவலை நிறுத்துமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story