டாமன் பகுதியில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 14 மீனவர்கள் மீட்பு - கடலோர காவல்படை நடவடிக்கை


டாமன் பகுதியில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 14 மீனவர்கள் மீட்பு - கடலோர காவல்படை நடவடிக்கை
x

Image Courtesy : ANI

கடலில் மூழ்கிய படகில் இருந்து 14 மீனவர்களை கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

டாமன்,

குஜராத்தின் நவ்சாரியில் இருந்து 14 மீனவர்கள் படகு ஒன்றில் மும்பையை நோக்கி நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தனர். டாமன் கடற்பகுதியில் வந்தபோது படகின் என்ஜின் பழுதாகி கடல் நீர் புகுந்தது.

தொடர்ந்து நீர் புகுந்ததால் படகு படிப்படியாக மூழ்க தொடங்கியது. உடனே அதில் இருந்த மீனவர்கள் நேற்று காலையில் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக டாமன் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டரில் அங்கு விரைந்தனர்.

பின்னர் படகில் இருந்த 11 மீனவர்களை முதலில் மீட்டனர். 3 மீனவர்கள் படகை சரி செய்து கரை திரும்புவதாக கூறி, ஹெலிகாப்டரில் செல்ல மறுத்தனர். ஆனால் அவர்களின் முயற்சி வீணானது.

படகு தொடர்ந்து மூழ்கியதால், அந்த 3 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் மீட்டு கரை சேர்த்தனர். இந்த சம்பவம் டாமன் கடலோர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story