செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.41% அதிகரிப்பு


செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.41% அதிகரிப்பு
x

செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் செப்டம்பர் மாதம் சில்லரை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான நுர்வோர் விலை குறியீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது.

அதில், செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கம் 7.41 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கமான 7.0 சதவிகிதத்தை விட அதிகம் ஆகும்.

சில்லறை விலை பணவீக்கம் அதிகரிப்பால் உணவு பொருட்கள், எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம் 2 முதல் 6 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆனால், அந்த அளவை விட சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஆனாலும், சில்லறை பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகளின் விலை உயர்வு சில்லறை பணவீக்கம் அதிகரிப்பின் நேரடி தாக்கமாக உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு விலைவாசியை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பணவீக்கம் அதிகரிப்பு நுகர்வோர் பொருட்களின் விலையை அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


Next Story