மைசூர்: ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி மீது மர்மநபர்கள் கார் ஏற்றி கொலை
மைசூர் மானசகங்கோத்ரி வளாகத்தில் மத்திய உளவுத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி மர்மநபர்களால் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.
மைசூர்,
கர்நாடக மாநிலம் மைசூரில் ஓய்வுபெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரியான ஆர்.எஸ். குல்கர்னியை மர்மநபர்கள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கங்கோத்ரி வளாகத்திற்ஜ்ய் அடுத்த சாலையில் ஆர்.என். குல்கர்னி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திட்டமிட்டு, நம்பர் பிளேட் இல்லாத காரை பயன்படுத்தி கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மைசூர் நகர போலீஸ் கமிஷனர் டாக்டர் சந்திரகுப்தா கூறுகையில், "இது தொடர்பாக ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரிக்கத் தொடங்கியுள்ளோம், ஏசிபி தலைமையில் மூன்று போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.