பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2022 5:34 PM GMT (Updated: 5 Jun 2022 5:51 PM GMT)

பாகிஸ்தானிய படகில் இருந்து கடலில் வீசிய ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

காந்திநகர்,

குஜராத்தின் கட்சி பகுதியில் கடந்த மே 30ந்தேதி இரவில் பாகிஸ்தானிய படகு ஒன்று அத்துமீறி இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்தது. அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டது.

இந்திய படையினரிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக படகில் இருந்த 50 கிலோ போதை பொருட்களை படகில் இருந்தவர்கள் கடலில் வீசினர். படகில் இருந்த 7 பேரையும் இந்திய கடலோர காவல் படை கைது செய்தது.

கடலில் வீசப்பட்ட போதை பொருட்களை தேடும் பணி நடந்தது. இதில், ரூ.200 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story