பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது
x

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சிலர் தங்கம், போதைப்பொருட்களை கடத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தூரியில் இருந்து பெங்களூரு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது.

இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், அவர் இந்தூரியில் இருந்து 6½ கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை மீட்டனர். அவரது பெயரை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


Next Story