ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x

ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு எதிரான மனு தொடர்பாக மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கக்கூடாது. ஆதார் எண் இருப்பவர்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறீர்களா? என கேட்டது. இதற்கு மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சியாம் திவான் ஆஜராகி, அதுதான் மனுதாரரின் நிலைப்பாடு என வாதிட்டார்.

வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது. மேலும் இந்த மனுவை ஆதார் சட்ட திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுடன் இணைக்க உத்தரவிட்டனர்.


Next Story