வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க திட்டம் - கர்நாடக மந்திரி தகவல்


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க திட்டம் - கர்நாடக மந்திரி தகவல்
x

Image Courtesy : ANI

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோகா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கர்நாடக அரசின் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோகா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பான விரிவான அறிவிப்புகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிடுவார் என்று தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ரூ.2,000 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், ஆனால் பா.ஜ.க. இந்த திட்டத்தை உடனே செயலபடுத்தப் போவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story