அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை


அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
x

செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளும்படி அண்ணன் கூறியதால் 18 வயதான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் டும்பிலி பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இரவு, பகல் பாராமல் அப்பெண் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திவந்துள்ளார்.

இதனை அந்த பெண்ணின் பெற்றோரும், பெண்ணின் சகோதரனும் (22வயது) கண்டித்துள்ளனர். வீட்டில் நேற்று மதிய உணவு சாப்பிடுக்கொண்டிருந்த போதும் அப்பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்ததால் பெண்ணின் சகோதரன் கண்டித்துள்ளான். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் சகோதரன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.

இந்நிலையில், செல்போன் பயன்படுத்தியதை அண்ணன் கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாலை 5 மணியளவில் சகோதரன் வீட்டிற்கு வந்துள்ளான். தனது தங்கையின் அறை பூட்டி இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த சகோதரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது தங்கை அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பயன்படுத்தியதை அண்ணன் கண்டித்ததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story